×

வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்

கிருஷ்ணகிரி, ஜன.11: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஸ்டிரைக் பிசுபிசுத்தது. வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. நேற்று இரண்டாவது நாளாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீத பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

The post வழக்கம் போல் பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,AIADMK ,State Transport Corporation ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு